Events

Events Events Events

*நகரத்தார் சுயம்வரம்*
காரைக்குடியில் செட்டிநாடு மேட்ரிமோனி நடத்திய நகரத்தார் சுயவரநிகழ்ச்சி அரியக்குடி *கே வி எஸ் மஹாலில் 23/2/2020* ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செல்வி.சீ.மீனாட்சி இறைவணக்கம் பாட,செட்டிநாடு மேட்ரிமோனி நிறுவனர் அண.சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார்.

உச்சநீதிமன்ற நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன் அவர்கள் இணையவழி வாழ்த்துரை வழங்க விழா துவக்கியது.

 à®µà®²à¯ˆà®¯à®ªà®Ÿà¯à®Ÿà®¿ ரத்தனா குழுமத்தின் நிறுவனத் தலைவர் பி.எல்.கே.பழனியப்பன் செட்டிநாடு செயலியை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

சென்னை கமலா சினிமாஸ் அதிபர் தனவணிகன் இதழ் ஆசிரியர் வி.என்.சிடி. வள்ளியப்பன் *'நகரத்தார் திருமண வழிகாட்டி'* நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்ற முதல்பிரதியை சிங்கப்பூர் அபிராமி நகைக்கடை உரிமையாளர் பழனியப்பன் பெற்றுக்கொண்டார்.

காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கவிஞர். சேவு.முத்துக்குமார் *'மேன்மக்கள் நகரத்தார்'* என்ற தலைப்பிலும், மதுரை ஐஸ்வரியா சில்க்ஸ் உரிமையாளர் மேகலா முத்துபழநியப்பன் *'செட்டி நாட்டு வணிகமும்', ஆச்சிமார்களின் பங்களிப்பும்'* என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

வரன்கள் அறிமுகத்தை ஆசிரியை கா.லெட்சுமி, சுப.உமா,சுப.தையல்நாயகி,தி.நாச்சமை,மீ.கண்ணன்,முனைவர் ஜெ.பிரகாஸ்மணிமாரன் ஆகியோர் செய்தனர்.
திருமதி.சீனா.ரேணுகா நன்றி கூறினார்.
நாரயணா காபி ஹவுஸ் உரிமையாளர் ஆர்.எம்.என்.கருப்பையா,அற்புதா ஸ்நாக்ஸ் உரிமையாளர் பொறியாளர் சுப்பிரமணியன்,பரிபூரண கன்ஸ்ட்ரக்சன்ஸ் உரிமையாளர் பொறியாளர் அண.பரிபூரண ஆனந்த்,வெங்கட் ஆகியோர் பங்கேற்றனர்.

  நிகழ்வில் 1200 நகரத்தார் பெருமக்கள் பங்கேற்க 350 பதிவுகள் நடைபெற்று,மூன்று திருமணங்கள் பேசி முடிக்கப்பட்டன

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் செட்டிநாடு மேட்ரிமோனி சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. அரியக்குடி கே.வி.எஸ். மஹால் நிகழ்வை சிறப்பாக நடத்திட இடம் தந்ததோடு, காரைக்குடியிலிருந்து வந்து செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்தார்கள்.